பணம் பறிமுதல் - தேடல் முடிவுகள்

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்

2024-04-14 17:26:01 - 3 weeks ago

ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் சென்னை எழும்பூரில் இருந்து கடந்த 6-ந்தேதி புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.4 கோடி பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்தை கொண்டுசென்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக பணத்தை கொண்டுசென்றதாக வாக்குமூலம் அளித்தனர். இது தொடர்பாக போலீசார்


அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் ரூ.7.5 லட்சம் பறிமுதல்

2024-04-08 12:35:43 - 1 month ago

அமைச்சர் துரைமுருகன் சொந்த கிராமத்தில் ரூ.7.5 லட்சம் பறிமுதல் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ளது காங்குப்பம் கிராமம். இது அமைச்சர் துரைமுருகனின் சொந்த ஊர் ஆகும். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். விவசாயி. வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இவருடைய வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறக்கும்


வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த தொழில் அதிபர் வீட்டில் 4.8 கோடி ரூபாய் சிக்கியது

2024-04-04 02:48:51 - 1 month ago

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க வைத்திருந்த தொழில் அதிபர் வீட்டில் 4.8 கோடி ரூபாய் சிக்கியது நாமக்கல் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த சந்திரகேரன் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்ய வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து நாமக்கல், ஈரோடு, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று காலை திடீரென


கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல்

2024-03-29 02:41:45 - 1 month ago

கோவிலில் பிச்சை எடுத்த பெண்ணிடம் ரூ.1½ லட்சம் பறிமுதல் திருப்பூர், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் குணசேகர் தலைமையிலான பறக்கும் படையினர் நல்லூர் தேவாலயம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 36 வயது மதிக்கத்தக்க பெண் மது போதையில் இருந்தார். இடுப்பில் 3 கட்டுகள் பணம் வைத்திருந்தார். அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். பணத்தை


பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள்

2024-03-26 10:39:35 - 1 month ago

பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட வாகனத்தில் 180 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி பொருட்கள் பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 19-ந் தேதி நடைபெற உள்ளது என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட நிலையில் தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது.அதன் அடிப்படையில் தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லையில் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்